×

ரூ.59லட்சத்துக்கு பருத்தி ஏலம்

 

நாமக்கல், ஏப்.26: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்துக்கு நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 2700 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். விவசாயிகள் முன்னிலையில், கூட்டுறவு சங்க அலுவலர்கள் பருத்தி ஏலம் நடத்தினர். ஏலத்தில், ஆர்சிஎச் ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ.8149க்கும், மட்டரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.6050க்கும் ஏலம் போனது. இதில் மொத்தம் 2700 மூட்டை பருத்தி மொத்தம் ரூ.59லட்சத்துக்கு ஏலம் போனது.

The post ரூ.59லட்சத்துக்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Agricultural Manufacturers Cooperative Selling Federation ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...