×

கோம்பை மலையடிவாரத்தில் கொட்டை முந்திரி சாகுபடி பணி தீவிரம்

 

தேவாரம், ஏப். 26: கோம்பை மலையடிவாரத்தில் உள்ள நிலங்களில் கொட்டை முந்திரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கோம்பை, க.புதுப்பட்டி அனுமந்தன்பட்டி, போடி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டை முந்திரி சாகுபடி பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் இப்பணி நடக்கிறது. இங்கு விளையும் கொட்டை முந்திரி சேகரிக்கப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கிறது. கொட்டை முந்திரி காடுகளில் தான் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த சாகுபடி பணிக்கு மழை பெய்தால் போதும், நல்ல லாபம் விவசாயிகளுக்கு கிடைக்கும், கடந்தாண்டு தேனி மாவட்டத்தில் பருவமழை நன்றாக பெய்ததால் இச்சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

The post கோம்பை மலையடிவாரத்தில் கொட்டை முந்திரி சாகுபடி பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kombai ,Devaram ,Kombai mountain ,Kombai Mountains ,
× RELATED போடி விரிவாக்க சாலையில் சாலை நடுவே...