×

சுற்றுலா பயணிகள் சாலையோரம் வீசி சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியாளர்கள்

 

கூடலூர், ஏப். 26. தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட சாலையோர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற பிளாஸ்டிக் பாட்டில்கள், குளிர்பான டப்பாக்கள் உள்ளிட்டவற்றை தேவர்சாலை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வந்து சென்றன வண்ணம் உள்ளனர். பேருந்து, கார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி வந்து செல்வதால் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான டப்பாக்கள் உள்ளிட்ட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரங்களில் வீசிச் செல்கின்றனர். அவற்றை தேவர்சோலை பேரூராட்சி பணியாளர்கள் சேகரித்து சுத்தம் செய்து வருகின்றனர்.

The post சுற்றுலா பயணிகள் சாலையோரம் வீசி சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Devar Solai ,Dinakaran ,
× RELATED கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு..!!