×

களக்காட்டில் காட்டுத்தீ விபத்தை தடுக்க தீயணைப்பு, வனத்துறையினருக்கு பயிற்சி

களக்காடு, ஏப்.26: களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் கடும் வெப்பம் நிலவுகிறது. பொதுவாக கோடை காலங்களில் காட்டுத்தீ விபத்து ஏற்படும் அபாயம் நிலவும் என்பதால் அதனை தடுக்க வனத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது வழக்கம். அதன்படி களக்காடு தலையணையில் காட்டுத்தீ விபத்தை தடுப்பது குறித்து தீயணைப்பு, வனத்துறையினருக்கு கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நாங்குநேரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்கள், களக்காடு வனத்துறை ஊழியர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோடைகாலத்தில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், தீ ஏற்படாமல் தடுப்பது பற்றியும் கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் கள பயிற்சியும் கொடுக்கப்பட்டது. நாங்குநேரி தீ அணைப்பு நிலைய அதிகாரிகள் பாபநாசம், ராதாகிருஷ்ணன் (போக்குவரத்து) சிறப்பு நிலை அலுவலர் வானமாமலை, களக்காடு வனசரகர் பிரபாகரன் கலந்து கொண்டனர்.

The post களக்காட்டில் காட்டுத்தீ விபத்தை தடுக்க தீயணைப்பு, வனத்துறையினருக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Khalakkat ,GALLACKADA ,Khalakadam Tigers ,
× RELATED களக்காடு வரதராஜபெருமாள் கோயில்பங்குனி பிரமோற்சவத்தில் தேரோட்டம்