×

ஏப். 30க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை

விகேபுரம், ஏப். 26: விகேபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தி ஊக்கத்தொகையை பெற்றுக் கொள்ளலாம் என நகராட்சி தலைவர் செல்வசுரேஷ் பெருமாள் மற்றும் ஆணையாளர் கண்மணி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: விகேபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023- 24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30க்குள் செலுத்திட வேண்டும். இவ்வாறு செலுத்தும் சொத்து வரி உரிமையாளர்கள் தங்களது நிகர சொத்து வரித்தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

The post ஏப். 30க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை appeared first on Dinakaran.

Tags : Vikepuram ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி