×

ராயகிரி பேரூராட்சி கூட்டம்

சிவகிரி,ஏப்.26: ராயகிரி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் இந்திரா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குறிஞ்சி மகேஷ், நிர்வாக அலுவலர் சுதா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இடைநிலை உதவியாளர் பத்திரகாளி அஜெண்டா வாசித்தார். கூட்டத்தில் நியமனக்குழு உறுப்பினர் சேவகபாண்டியன், வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள் காளியப்பன், சிவனுப்பாண்டியன், தங்கத்துரை, இசக்கிமுத்து, பேரூராட்சி உறுப்பினர்கள் பராசக்தி, இசக்கிராணி, சின்னத்தாய், வீரலட்சுமி, கலைச்செல்வி, லட்சுமணன், பேச்சியம்மாள், தமிழ்ச்செல்வி மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். தலையணை கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் எனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post ராயகிரி பேரூராட்சி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Rayagiri Municipal Council ,Sivagiri ,President ,Indira ,Vice Chairman ,Kurinji Mahesh ,Administrative ,Sudha ,Rayagiri Municipality Meeting ,Dinakaran ,
× RELATED வீடு புகுந்து டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதம்