×

வேலை வாங்கி தருவதாக பெண்களை ஏமாற்றி அழகுநிலையத்தில் பாலியல் தொழில்: மேலாளர் கைது

துரைப்பாக்கம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் சலூன் மற்றும் ஸ்பா என்ற பெயரில் அழகு நிலையம் உள்ளது. அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக தாம்பரம் கமிஷனர் அமல்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் விபச்சாரத் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு, திருச்சி, திருவானைக்கோயில், ஜம்புகேஸ்வரர் நகரைச் சேர்ந்த குமார் (40) என்பவர் 6 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது.

இதற்காக அதன் உரிமையாளர் குமார், உத்தரபிரதேச மாநிலம், ராம்பூரைச் சேர்ந்த ஆசிப் (35) என்பவரை மேலாளராக நியமித்துள்ளார். பின்னர் கர்நாடகா, உத்தரபிரதேசம், தஞ்சாவூர், சென்னை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக வரவழைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதில் ஆசிப்பை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான குமார் என்பவரை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட 6 பெண்களும் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் ஆசிப்பை கானத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கானத்தூர் போலீசார் ஆசிப்பை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post வேலை வாங்கி தருவதாக பெண்களை ஏமாற்றி அழகுநிலையத்தில் பாலியல் தொழில்: மேலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Duraipakkam ,Salon ,Spa ,Uthandi ,East Coast Road, Chennai ,
× RELATED என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால்...