×

12 மணிநேர வேலை சட்ட மசோதாவை முற்றிலும் ரத்து செய்ய விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு தேமுதிக தொழிற்சங்கம், ஆளும் கூட்டணி தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் 12 மணி நேர வேலை சட்ட மசோதா மீதான மேல் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை தேமுதிக சார்பில் வரவேற்கிறேன்.
மக்களுக்கான எந்த ஒரு திட்டங்களும், சட்ட மசோதாக்களும் புதிதாக கொண்டு வந்தால் தமிழக அரசு அனைவரிடமும் கலந்து ஆலோசித்து பிறகு அதனை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மேலும் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை முற்றிலுமாக ரத்து செய்யும் வரை தொழிலாளர்களின் நலனுக்காக தேமுதிக தொடர்ந்து குரல் கொடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 12 மணிநேர வேலை சட்ட மசோதாவை முற்றிலும் ரத்து செய்ய விஜயகாந்த் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Chennai ,DMDK ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்