×

தினகரன் –விஐடி இணைந்து நடத்தியது வேலூரில் ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர்

சென்னை: விஐடியும் வேலூர் தினகரன் நாளிதழும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் உயர்கல்வி படிப்புக்காக ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டும் 10ம் வகுப்பு முடித்துவிட்டு, மேல்நிலை கல்வி செல்ல விரும்பும் மாணவர்கள், பிளஸ் 1ல் இருந்து பிளஸ் 2 செல்லும் மாணவர்கள் எத்தகைய உயர்கல்வியை தேர்வு செய்து படிப்பது, அதற்கான வாய்ப்புகள் எங்கெங்கு உள்ளன என்பதை அறிந்து கொள்ளும் வகையில் தினகரன்- விஐடி சார்பில் `வெற்றி நமதே’ நிகழ்ச்சி நேற்று விஐடியில் நடந்தது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக தினகரன் செய்தி ஆசிரியர் மனோஜ்குமார் வரவேற்றார். தொடர்ந்து, விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டு பேசினார்.

தொடர்ந்து விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது: விஐடியும், தினகரனும் ேசர்ந்தாலே வெற்றி நமதே தான். இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. உயர்கல்வியை எல்லாரும் பெற வேண்டும். மாநில வாரியாக பார்த்தால் உயர்கல்வியில் தமிழ்நாடு முதல் வரிசையில் உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் நல்ல தரமான பள்ளிகள் இருக்கின்றன. இங்கு கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்க ‘ஸ்டார்ஸ்’ திட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு கிராமப்புறத்தை சேர்ந்த அரசு பள்ளியில் படித்த ஒரு மாணவனையும், மாணவியையும் தேர்வு செய்து கல்வி, உணவு, தங்குமிடம் ஆகியவற்றை இலவசமாக கொடுத்து அவர்களுக்கு ேவலையும் வாங்கித் தருகிறோம். இத்திட்டத்தால் அவர்கள் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். அவர்களின் வருமானம் இன்று ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உள்ளது. உயர்கல்வியால் வீடும் உயரும், நாடும் உயரும். இவ்வாறு பேசினார்.

கருத்தாளர்களும் பல பயனுள்ள தகவல்களை வழங்கினர். கருத்தாளர்கள் ஜூபிடர் அகாடமி துணை நிறுவனர் சி.நாகதாதா, சங்கர் ஐஏஎஸ் அகாடமி ஏ.ரமேஷ் ஆதித்யா, கே.எஸ்.அகாடமி நிறுவனர் சிஏ கே.சரவணன் ஆகியோர் மாணவர்களின் உயர்கல்வி சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தனர். நிகழ்ச்சியை கவிஞர் இலக்குமிபதி தொகுத்து வழங்கினார். முடிவில் சென்னை குங்குமம் டாக்டர் பொறுப்பு ஆசிரியர் இளங்கோ கிருஷ்ணன் நன்றி கூறினார். இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். பெற்ேறார்களும் தங்களது பிள்ளைகளுடன் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு முதலில் வந்த 9 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இலவசமாக பஸ் வசதி செய்யப்பட்டன. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் பைல், பேனா உள்ளிட்ட கிட் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், உயர்கல்விக்கான படிப்புகளை தேர்வு செய்ய உதவியாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் தினகரன்-விஐடி இணைந்து செய்தன. ரேடியோ பார்ட்னராக வேலூர் சூரியன் எப்எம் 93.9 இருந்தது.

The post தினகரன் – விஐடி இணைந்து நடத்தியது வேலூரில் ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Dinakaran ,VIT ,Chennai ,Velur ,Victory Namade ,Win Namade ,
× RELATED வேலூரில் தினகரன் -விஐடி இணைந்து...