×

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக ரூ.110 கோடி முதலீடு செய்த விவகாரம் செட்டிநாடு குழுமத்தில் இரண்டாவது நாளாக சோதனை: ஆவணங்கள் அடிப்படையில் நிர்வாகிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

சென்னை: செட்டி நாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தினர்.சென்னை தலைமையிடமாக செட்டிநாடு குழுமம் இயங்கி வருகிறது. இந்த குழுமத்திற்கு சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலை, மின் உற்பத்தி நிறுவனம், நிலக்கரி நிறுவனம் என பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. செட்டி நாடு குழுமம் தங்களது வருமானத்தை மறைத்து ஒன்றிய அரசுக்கு பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக கடைசியாக கடந்த 2020ம் ஆண்டுகளில் வருமான வரித்துறையினர்.

சோதனையில் ரூ.23 கோடி ரொக்கம், ரூ.700 கோடி ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக ரூ.110 கோடி முதலீடு செய்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் ரூ.110 கோடி குறித்து அமலாக்கத்துறை தனியாக தனது விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக செட்டி நாடு குழுமத்தின் மும்பையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் சென்னை எழும்பூர் ருக்குமணி லட்சுமிபதி சாலையில் உள்ள அலுவலகங்கள் என மொத்தம் 6 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடந்தது. இந்த சோதனையில் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக ரூ.110 கோடி முதலீடு செய்தது குறித்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களை வைத்து நேரடியாக செட்டிநாடு குழும நிர்வாகிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக விடிய விடிய நேற்றும் விசாரணை நடத்தினர். 2வது நாள் விசாரணையில் சென்னையில் எழும்பூர் சிகப்பி ஆச்சி வளாகத்தில் மட்டும் சில ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடந்தது. மற்ற இடங்களில் சோதனை முடிந்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை முடிவில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்ததாக செட்டி நாடு குழுமத்தின் மீது வழக்கு பதிவு செய்து சில சொத்துக்கள் முடக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெளிநாடுகளில் சட்டவிரோதமாக ரூ.110 கோடி முதலீடு செய்த விவகாரம் செட்டிநாடு குழுமத்தில் இரண்டாவது நாளாக சோதனை: ஆவணங்கள் அடிப்படையில் நிர்வாகிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chettinad Group ,CHENNAI ,Chetty Nadu group ,Chettinadu ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...