×

கேதார்நாத் கோயில் திறப்பு

கேதார்நாத்: உத்தரகாண்டில் வானிலை ஓரளவு சீரடைந்ததால் கேதார்நாத் கோயில் நேற்று திறக்கப்பட்டது.உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயில் ஏப்ரல் 25ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.வானிலை ஓரளவு சீரானதால் நேற்று காலை திட்டமிட்டபடி கேதார்நாத் கோயில் திறக்கப்பட்டது.கோயிலின் தலைமை பூசாரி ராவல் பீமா சங்கர் லிங் மந்திரங்கள் ஓதி, சம்பிரதாயப்படி கோயில் கதவை தரிசனத்துக்காக திறந்து வைத்தார். கடும் குளிரை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவபெருமானை தரிசனம் செய்தனர்.உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

The post கேதார்நாத் கோயில் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kedarnath ,Temple ,Kedarnath temple ,Uttarakhand ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்