×

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. இக்கோயில், உலக பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 11 நாட்கள் திருவிழா மிகவும் விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.

இந்தாண்டு சித்திரை திருவிழா நேற்று காலை வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல இசையுடன் தொடங்கியது. பின்னர், சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, ேகாயில் மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றனர். திருவிழாவின் 3ம் நாள் உற்சவமான 27ம் தேதி 63 நாயன்மார்கள் உற்சவம் நடக்கிறது. மே 1ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள்.

The post திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tirukkalukkunram Vedakriswarar Temple Painting Festival ,Thirukkalukkunram ,Chitra ,Vedakriswarar temple ,Thirukkalukunram ,Vedakriswarar hill ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?