×

வாலாஜாபாத் –ஸ்ரீபெரும்புதூர் இடையே மண் அணைக்காததால் பள்ளமான தார்சாலை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் – ஸ்ரீபெரும்புதூர் இடையே தார்சாலை இருபுறமும் மண் அணைக்கப்படாமல் பள்ளமாக உள்ளதால், விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சி இங்கு 15 வார்டுகள் உள்ளன 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

மேலும், இப்பேரூராட்சியில் ஒன்றிய அலுவலகம், ரயில் நிலையம், காவல் நிலையம் மேல்நிலைப் பள்ளிகள், வங்கிகள், நூலகம் சர்பதிவாளர் அலுவலகம், கருவுலக அலுவலகம், தாலுகா அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் காலையும், மாலையும் எப்பொழுதுமே பரபரப்பாகவே காணப்படும் வாலாஜாபாத் – ஸ்ரீ பெருமந்தூர் சாலை இந்த சாலை வழியாக நாள்தோறும் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு நகர்புற பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் வாலாஜாபாத் – ஸ்ரீபெரும்புதூர் தார் சாலையின் இருபுறமும் மண் அணைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் நாள்தோறும் விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ரயில் நிலைய மேம்பாலம் உள்ளன. இந்த மேம்பாலத்தில் இருந்து இறங்கும் பொழுது, ஏறும் பொழுதும் இருபுறமும் சாலை மண்கள் அணைக்க படாததால் சாலையையொட்டி ஆழமான பள்ளங்களாக போன்று காட்சியளிக்கின்றன. இதில், இரு சக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது.

மேலும், ஒருசில நேரங்களில் முந்தி சொல்லும் வாகனங்களாலும், விபத்துக்கள் ஏற்படும் சூழலும் நிலவுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் நெடுஞ்சாலைத்துறை ஸ்ரீபெரும்புதூர் சாலையில் இருபுறமும் மண்கொட்டி இருசக்கர வாகன விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், கிராம மக்களும் வலியுறுத்துகின்றனர்.

The post வாலாஜாபாத் – ஸ்ரீபெரும்புதூர் இடையே மண் அணைக்காததால் பள்ளமான தார்சாலை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Wallajabad ,Sripuruthur ,WALLAJAHABAD ,Sripurudur ,Sripurudur Tarsal ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட...