×

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ரஷ்ய தலைமை விஞ்ஞானி திடீர் சாவு

ராதாபுரம்:நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த வளாகத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் இயங்கி வருகின்றன.மேலும் 3,4வது அணு உலைக்கான பணிகளை ரஷ்ய அணுசக்தி கழகத்துடன் இணைந்து இந்திய அணுசக்தி கழகம் மேற்கொண்டு வருகிறது.இந்த பணிகள் 2024ல் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பணிகளை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமானப் பிரிவுத் தலைவராகவும்,இந்திய திட்டங்களுக்கான துணை இயக்குநராகவும் இருந்த ரஷ்யாவை சேர்ந்த தலைமை விஞ்ஞாணி வாடிம் க்ளிவ்னென்கோ (62) கண்காணித்து வந்தார்.ராதாபுரம் அணுவிஜய் டவுன்ஷிப்பில் உள்ள ரஷ்யன் ஹவுசிங் காம்பளக்சில் மனைவி,மகள்,மருமகன் உட்பட உறவினர்களுடன் வசித்து வந்தார்.இவருக்கு இதய நோய் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால்,நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

The post கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ரஷ்ய தலைமை விஞ்ஞானி திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Kendangulam nuclear station ,Radhapuram ,Russia ,Nellai district ,Chief Scientist ,Basket Atomic Station Sudde ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...