×

ரூ.58 கோடி மோசடியில் ஈடுபட்ட அமுதசுரபி போலி கூட்டுறவு வங்கியின் 23 இடங்களில் ரெய்டு

சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் முனியப்பன்நகரை சேர்ந்தவர் ஜெயவேல் (67). இவர் தனது உறவினர்களான தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து சேலம் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற கூட்டுறவு வங்கியை தொடங்கினார். அதன்மூலம் ஏராளமானோரிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணத்தை முதலீடு பெற்றனர். இவ்வாறு பெறப்பட்ட பணம் ரூ.58 கோடியை மோசடி செய்ததாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் குவிந்தது. போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த ஜெயவேல், கணக்காளர் கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, தமிழ்நாடு முழுவதும் 23 இடங்களில் செயல்பட்ட அமுதசுரபி கூட்டுறவு வங்கி, அதன் சார்பு அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் 3, ஈரோட்டில் 3, தர்மபுரியில் 4, கிருஷ்ணகிரியில் 2, திருச்சியில் 2 இடங்களிலும், திருப்பூர், நாமக்கல், கரூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.ஆனால், பல இடங்களில் அமுதரபி அலுவலகம் காலி செய்யப்பட்டிருந்தது. சில இடங்களில் நடந்த சோதனையில், பொதுமக்களிடம் இருந்து அதிக வட்டி தருவதாக பெறப்பட்ட முதலீடு தொடர்பான ஆவணங்கள், கணினி, ஹார்டு டிஸ்குகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

The post ரூ.58 கோடி மோசடியில் ஈடுபட்ட அமுதசுரபி போலி கூட்டுறவு வங்கியின் 23 இடங்களில் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Raid ,Amurusurabi ,Salem ,Jayavel ,Ayothiyaptanam Munyappanagar, Salem district ,Braemanand ,Saranya ,Dinakaran ,Amarusurabi Fake Co ,Bank ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் திடீர் சோதனை..!!