×

இந்திய கடல்சார் துறையின் வளர்ச்சியை வலுப்படுத்தும்: சென்னை தேசிய தொழில்நுட்ப மையத்தின் டிஸ்கவரி வளாகம் குறித்து பிரதமர் கருத்து

டெல்லி: சென்னை ஐ.ஐ.டி.யில் தொடங்கப்பட்டுள்ள டிஸ்கவரி வளாகம் இந்தியாவின் கடல்சார் துறையின் வளர்ச்சியை வலுப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் சென்னை ஐ.ஐ.டி.யின் டிஸ்கவரி வளாகத்தில் ஒன்றிய கப்பல் துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் ரூ.77 கோடி செலவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்ப மையத்தை ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து மந்திரி சர்பானந்தா சோனோவால் நேற்று திறந்து வைத்தார்.

இதன் மூலம் துறைமுகங்கள், நீர்வழிகள், கடற்கரையோரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள், பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இந்த மையம் கடல்சார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேப்படுத்துவது நோக்கமாக கொண்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு சித்தி குறிப்பை மேற்கோள் காட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி சென்னை ஐ.ஐ.டி.யின் தொடங்கப்பட்டிருக்கும் இந்த டிஸ்கவரி திட்டம் இந்தியாவின் கடல்சார் துறையின் வளர்ச்சியை வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post இந்திய கடல்சார் துறையின் வளர்ச்சியை வலுப்படுத்தும்: சென்னை தேசிய தொழில்நுட்ப மையத்தின் டிஸ்கவரி வளாகம் குறித்து பிரதமர் கருத்து appeared first on Dinakaran.

Tags : Discovery Campus ,National Technology Centre ,Chennai ,Delhi ,Narendra Modi ,IIT Chennai ,India ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...