×

புதுச்சேரி வில்லியனூரில் போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 17 வயது சிறுமியை கடந்த 2015-ல் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஓட்டுநர் ராஜா (33) மீது புகார் எழுந்துள்ளது. சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராஜா மீதான வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

The post புதுச்சேரி வில்லியனூரில் போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Villianur ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு