சூடான்: சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக மீட்கப்பட்ட 278 பேர் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் தாயகத்திற்கு திரும்புகின்றனர். வட ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. ஒரு வாரமாக நீடித்த இந்த வன்முறையில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அங்குள்ள சுமார் 3,000 இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆப்ரேஷன் காவிரி செயல்திட்டத்தின் கீழ் மீட்பு பணிக்காக சவூதி அரேபியாவின் ஜட்டாவில் விமானப்படையின் இரு சி 130 ஜே ரக விமானங்களும், சூடான் துறைமுகத்தில் ஐஎன்எஸ் சுமேதா கப்பலும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 278 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அங்குள்ள துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் தாயகத்திற்கு புறப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அறிந்தம் பாக்க்ஷே தெரிவித்துள்ளார்.
The post சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 278 பேர் மீட்பு: ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் தாயகம் திரும்புகின்றனர்..!! appeared first on Dinakaran.