×

தென்காசி மாவட்டத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பலி

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. ஆழ்வார்குறிச்சி அருகே பொட்டல்புத்தூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி , பிரேமா வுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு குழந்தை ஆதிரா தனது தாத்தா மகேந்திரனுடன் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது வீட்டின் முன்பக்க சுற்றுசுவர் மழையின் காரணமாக வலுவிழந்த நிலையில் தரைமட்டமாக்க இடிந்து ஆதிரா குழந்தை மீது விழுந்தது.

இதில் படுகாயமடைந்த குழந்தை ஆதிரா அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகேந்திரன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வாள்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தென்காசி மாவட்டத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Alwarkurichi ,Tenkasi district ,
× RELATED சென்னை: காவலர் பணி நீக்கம்