×

போடி அருகே தென்னந்தோப்புகளாக மாறி ஆக்கிரமிப்பின் பிடியில் டொம்புச்சியம்மன் கண்மாய்-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

போடி : போடி அருகே ஆக்கிரமிப்பின் பிடியில் தென்னந்தோப்புகளாக மாறி இருக்கும் டொம்புச்சேரி டொம்புச்சியம்மன் கண்மாயில் மழை மற்றும் முல்லைப் பெரியாற்று நீர் தேக்க வழியில்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்டு நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,போடி அருகே டொம்புச்சேரி உள்ளது. இக்கிராம ஊராட்சியில் சுமார் 7ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு நிலத்தடி நீர் மற்றும் முல்லை பெரியாறு பாசன த்தின் மூலமாக பல்வேறு விவசாய சாகுபடிகள் நடக்கிறது. எனவே இத்தகைய விவசாயத்தை நம்பி ஏராளமான விவசாயிகளும் கூலி தொழிலா ளர்களும் இருந்து வருகின்றனர். இப்பகுதி விவசாயத்திற்காக சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் போடி முத்து தேவன்பட்டி மாநில நெடுஞ்சாலையில் டொம்புச்சேரியில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்மாய் டொம்புச்சியம்மன் கண்மாய் என அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதியில் கம்பம் பள்ளத்தாக்கிற்கு திறக்கப்படும் பாசன நீர் சின்னமனூர் குச்சனூர், உப்புக்கோட்டை வழியாக டொம்புச்சேரி டொம்புச்சியம்மன் கண் மாயை வந்தடைகிறது. இங்கு நிரம்பும் நீரானது விவசாயம் மட்டுமல்லாமல் இக்கண்மாயை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. இங்கு தேங்கும் தண்ணீர் 8 மாதம் வரை நிரம்பி இருப்பதால் நிலத்தடி நீர் ஊற்றெடுத்து, சுற்றியுள்ள நூற்றுக்கணக்கில் உள்ள ஆழ்துளை மற்றும் கிணறுகளில் அதிக அளவில் ஊற்று நீர் உய ர்வதால் அதன் மூலமாக தென்னை, காய்கறிகள், சோளம், மக்காச்சோளம், தக்காளி, கரும்பு, வாழை உள்ளிட்ட பல தரப்பட்ட விவசாய சாகுபடிகள் நடக்கிறது.

நூறு ஆண்டுகளை தாண்டிய பழமை வாய்ந்த இக்கண்மாயை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பலர் ஆக்கிரமித்து தென்னந்தோப்புகளாக மாற்றிவிட்டனர். இதனால் இக்கண்மாய் பரப்பளவில் 30 முதல் 40 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்புக்குள்ளாகி வயல்வெளி பகுதிகளாகவும் மாறியிருப்பதால் கண்மாயின் பரப்பளவு பாதியாக குறைந்து முல் லைப் பெரியாறு மற்றும் மழை நீரை தேக்கு வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இக்கண்மாயை முறையாக தூர்வாராததாலும், கண்மாய்க்குள் குப்பைகள் கொட்டுவதாலும், கண்மாயின் இயற்கைத் தன்மை மாறியுள்ளது. மேலும் கண்மாயின் இருகரைகளும் பலமிழந்துள்ளது. இதனால் கண்மாயில் தண்ணீர் தேக்கும்போது கண்மாய் கரை உடையும் அபாயம் உள்ளது.

மேலும், கண்மாய்க்குள் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதாலும், பாசன நீர் தேக்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கண்மாயை சுற்றியுள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாய பாசனநீர் பற்றா க்குறை ஏற்பட்டு வருகிறது. அதனால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுக ளிலும் தண்ணீர் ஊற்று கிடைக்காமல் கிணறுகள் வறண்டு வருகின்றன.
டொம்புச்சியம்மன் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், கண்மாயை முழுமையாக , தூர்வாரிட வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை புகார்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போடி தொகுதி எம்எல்ஏவாக உள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் விவசாயிகள் கிராம மக்கள் நேரடி புகார்களை அளித்தும் பலனில்லை.

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கண்மாய், குளங்கள் கால்வாய்கள்,நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் அ ங்குள்ள ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில் டொம்புச்சியம்மன் குளத்தினை சர்வேயர் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடு க்க கோரிக்கை எழுந்துள்ளது.

டொம்புச்சேரி விவசாயி பொன்னையா கூறுகையில், ‘‘பழமை வாய்ந்த இந்த டொ ம்புச்சியம்மன் கண்மாய் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன் தருவதாக இருக்கிறது.பல்வேறு கிராமங்களையும் விவசாய த்தையும் காக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுத்து கருவேல மரங்களை வெட்டி அகற்றி கரை களை உயர்த்தி பலப்படுத்திட வேண்டும்’’என்றார்.

The post போடி அருகே தென்னந்தோப்புகளாக மாறி ஆக்கிரமிப்பின் பிடியில் டொம்புச்சியம்மன் கண்மாய்-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dompuchyamman ,South Nadu ,Bodi ,Dombucherry ,Dombucheri ,Dombuchyamman Kennai ,South Southerland ,Dinakaran ,
× RELATED ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் போடி...