×

கோத்தகிரி அருகே தேனைத்தேடி அதிகாலையில் உலா வந்த கரடி-முள்ளம் பன்றியும் வருவதால் மக்கள் அச்சம்

கோத்தகிரி : கோத்தகிரி அருகே கொனவக்கரை கிராமத்தில் அதிகாலையில் உலா வந்த கரடி மற்றும் முள்ளம்பன்றியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கோத்தகிரி பகுதியில் தற்போது இரவு நேரங்களில் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் இரவு நேரங்களில் குடியிருப்பு வாசிகள் கவனமுடன் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பு அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து வெளியேறிய கரடி தேனைதேடி நீண்ட நேரம் சாலை ஓரத்தில் நேற்று அதிகாலை உலா வந்தது. அப்பகுதியில் தேன் இல்லை என்றவுடன் கரடி அப்பகுதியில் இருந்து வெளியேறி மீண்டும் வனப்பகுதியில் சென்றது.
இதேபோல் அதிகாலை நேரத்தில் இதே கிராமத்தில் முள்ளம் பன்றியும் ஒன்று உலா வந்தது. இதை பார்த்த இரவு நேர ரோந்து காவலர்கள் கிராமப் பகுதியில் சுற்றித்திரிந்த முள்ளாம் பன்றியை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

தற்போது வனத்துறையினர் அப்பகுதியில் நடமாடும் கரடியின் நடமாட்டத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோத்தகிரியில் தற்போது இரவு நேரங்களில் வனவிலங்குகள் அதிகளவு நடமாடுவதால் எச்சரிக்கையுடன் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோத்தகிரி அருகே தேனைத்தேடி அதிகாலையில் உலா வந்த கரடி-முள்ளம் பன்றியும் வருவதால் மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kothagiri ,Konavakarai ,
× RELATED மலைகாய்கறி தோட்டத்திற்குள் மழைநீர்...