×

கஞ்சா வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்றவர்கள் நீதிமன்றத்திற்குள் கூச்சல்-உறவினர்கள் போலீஸ் வேனை மறித்ததால் பரபரப்பு

மதுரை : மதுரை திடீர்நகர் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (21), இப்ராகீம்ஷா (25), சிவபாலகிருஷ்ணன் (எ) மூக்கன் பாலா (23), செல்லப்பாண்டி (22) மற்றும் சுதர்சன் (எ) வெள்ளையன் (22) ஆகிய 5 பேரும், கடந்த 9.6.2021ல் தலைவிரிச்சான் சந்து மாரியம்மன் கோயில் அருகே 24 கிலோ கஞ்சா வைத்திருந்தபோது திடீர் நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு மதுரை முதலாவது ேபாதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசுத் தரப்பில் வக்கீல் கே.விஜயப்பாண்டியன் ஆஜராகி வாதிட்டார்.

இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். 5 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 5 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை வழங்கிய தீர்ப்பை கேட்டதும், 5 பேரும் தகாத வார்த்தைகளில் விமர்சித்தவாறு கூச்சலிட்டனர். இதனால், வழக்கமான நீதிமன்ற பணிகள் பாதித்தது.

பின்னர் 5 பேரையும் போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றபோது இவர்களின் உறவினர்கள் போலீஸ் வேனை செல்லவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், வேனை தடுத்தவர்களை விலக்கி விட்டு 5 பேரையும் கொண்டு சென்றனர். தண்டனை விபரத்தை கேட்டு கூச்சலிட்டதாலும், உறவினர்கள் போலீஸ் வேனை மறித்ததாலும் நீதிமன்ற வளாகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

The post கஞ்சா வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்றவர்கள் நீதிமன்றத்திற்குள் கூச்சல்-உறவினர்கள் போலீஸ் வேனை மறித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Muneeswaran ,Ibrahimsha ,Sivabalakrishnan ,Mookan Bala ,Madurai Madurai Nagar ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி