×

விராலிமலையில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி: பல்வேறு பகுதிகளில் இருந்து 700காளைகள், 300வீரர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை: விராலிமலை மற்றும் பல்லடம் அருகே ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. வடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை தீரத்துடன் அடக்கிய காளையர்கள் பரிசுகளை அள்ளிச்சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 700 கலைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு களம் இறக்கப்பட்டனர். வடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து வந்த காளைகளை, கலைஞர்கள் போட்டி போட்டு அடக்கினார்கள்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், காளையர்களுக்கு பிடி கொடுக்காமல் சென்ற காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போல பல்லடம் அருகே அழகுமலையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 580 காளைகள் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் தீரத்துடன் அடக்கிவருகின்றனர்.

The post விராலிமலையில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி: பல்வேறு பகுதிகளில் இருந்து 700காளைகள், 300வீரர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Viralimalaya ,Pudukkotta ,Viralimalai ,Pallada ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்