×

பாஜ எம்.பி பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ள புகார்கள் தீவிரமானவை, நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டியவை : உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவரான பாஜ எம்.பி பிரிஜ்பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ள புகார்கள் தீவிரமானவை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜ எம்.பியுமான பிரிஜ்பூஷனுக்கு எதிராக இந்திய மல்யுத்த வீரர்கள் பலர் புகார்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வீராங்கனைகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் பாலியல் ரீதியிலாக துன்புறுத்தல் செய்வதாகவும் புகார்கள் சொல்லப்பட்டது. இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனைகள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள பாலியல் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்திரவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மல்யுத்த வீராங்கனைகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் பேசியதாவது,”ஒரு சிறுமி உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.வீராங்கனைகள் புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கை வெளியிடப்படவில்லை.பாலியல் குற்றச்ஷாட்டுக்கு ஆளான நபர் மீது வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பாலியல் புகார் கூறியுள்ள சிறுமி, மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்,” என்றார். இதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், “பாஜ எம்.பி பிரிஜ்பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ள புகார்கள் தீவிரமானவை, நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டியவை.வழக்கு தொடர்பாக மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண், டெல்லி அரசு, டெல்லி காவல்துறை உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.அதே சமயம் புகார் கூறிய வீராங்கனைகளின் பெயர்களை வெளியிடக்கூடாது, ” என்று தெரிவித்தனர். இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

The post பாஜ எம்.பி பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ள புகார்கள் தீவிரமானவை, நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டியவை : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Baja M. ,B Brij Bushan ,Supreme Court ,New Delhi ,President ,Indian Wrestling Society ,B Brijbhushan ,Dinakaran ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு