×

நிலவை மையமாக கொண்டு செயற்கைகோள் கூட்டத்தை உருவாக்க சீனா திட்டம்..!!

பெய்ஜிங்: நிலவை மையமாக கொண்டு செயற்கைகோள் கூட்டத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவின் விண்வெளி தினத்தையொட்டி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சீன நிலவு ஆய்வு திட்டத்தின் முதன்மை வடிவமைப்பாளர், நிலவை மையமாக கொண்டு செயற்கைகோள் கூட்டத்தை அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருவதை தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் தொலைத்தொடர்பு, ரிமோட் சென்சிங் எனப்படும் தொலை உணர்வு தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

நிலவை சுற்றி நிறுவப்படும் செயற்கைகோள் கூட்டத்தின் வாயிலாக மனித விண்வெளி பயணம் மற்றும் மனிதர்கள் அல்லாத விண்வெளி ஆய்வு பயணத்தை நேர்த்தியாக கையாள முடியும். மேலும் தொலைதூர விண்வெளி ஆய்வை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நிலவை மையமாக கொண்டு செயற்கைகோள் கூட்டத்தை உருவாக்க சீனா திட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : China ,BEIJING ,Space Day ,
× RELATED சீனாவில் புயல் தாக்கி 10 பேர் பலி