×

ஏப்.28ம் தேதி விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்

 

திருச்சி, ஏப்.25: திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை, இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். விவசாயப் பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் பிரதீப்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post ஏப்.28ம் தேதி விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers Shorter Day ,Trichy ,Trichy District Farmers Less Day Meeting ,Collector ,Pradeepkumar ,Day ,Dinakaran ,
× RELATED திருச்சியில் சோகம் கொள்ளிடம் தடுப்பணையில் குளித்த மாணவன் பலி