×

அரியலூர் மாவட்டத்தில் போட்டி தேர்வாளர்களுக்கு இலவச பயிற்சி

 

அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்தி குறிப்பு: ஒன்றிய மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக மற்றும் Youtube Channel இணையதளம் Employment உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் இணையதளம் மற்றும் Youtube Channel-லில் TNPSC, TNUSRB, IBPS, SSC, RRB & UPSC போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) விரைவில் அறிவிக்கப்படவுள்ள தொகுதி – IV பணிக்காலியிடங்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை ( ஏப் 26 ) முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது.

இப்பணிக்காலியிடங்களுக்கு கடவுச்சீட்டு அளவு புகைப்படம் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்டத்தில் போட்டி தேர்வாளர்களுக்கு இலவச பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,Ariyalur ,Ramana Saraswathi ,Union state government ,Dinakaran ,
× RELATED உணவை தேடி கிராமப்புற பகுதிக்கு வரும்...