×

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.76 லட்சத்துக்கு பருப்பு ஏலம்

 

காங்கயம், ஏப்.25: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.76 லட்சத்துக்கு தேங்காய் பருப்புகள் ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 6 விவசாயிகள் 2,331 கிலோ அடங்கிய 48 மூட்டை தேங்காய் பருப்பை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.76 லட்சத்துக்கு பருப்பு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக 1 கிலோ ரூ.82க்கும், குறைந்த பட்சமாக ரூ.64க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனை கூட கண்காணிப்பாளர் செ.ராமன் செய்திருந்தார்.

The post ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.76 லட்சத்துக்கு பருப்பு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Pulses ,Kangyam ,Kangyam Regulation Hall ,Tirupur district ,Dinakaran ,
× RELATED அதிக விளைச்சல் பெற்றிட பயறு வகைகளில்...