×

விபத்து வழக்கில் இழப்பீடு தராததால் பழநியில் அரசு பஸ் ஜப்தி

 

பழநி, ஏப்.25: விபத்து வழக்கில் இழப்பீடு தராததால், பழநியில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம்பையைச் சேர்ந்தவர் கார்த்திகைவேல் (35). கடந்த 2011ம் ஆண்டு ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் அருகில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ், இவர் மீது மோதியது. இதில் கார்த்திகைவேல் படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து இழப்பீடு வழங்கக் கோரி, பழநி சார்பு நீதிமன்றத்தில் கார்த்திகைவேல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் கார்த்திகைவேலுக்கு இழப்பீடாக ரூ.3.82 லட்சம் வழங்க வேண்டும் என போக்குவரத்து கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. தற்போது வட்டியுடன் ரூபாய் ரூ.5.62 லட்சம் வழங்கப்பட வேண்டி உள்ளது. இது தொடர்பாக கார்த்திகேயன் தரப்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி ஜெயசுதாகர், இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று பழநி பஸ் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட இருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.

The post விபத்து வழக்கில் இழப்பீடு தராததால் பழநியில் அரசு பஸ் ஜப்தி appeared first on Dinakaran.

Tags : Palani ,Athikombai ,Ottanchatram ,Palani government ,Dinakaran ,
× RELATED பழநி பைபாஸில் குப்பை கழிவுகளால் நோய்...