×

சிறை சீர்திருத்த நிர்வாகத்தில் தமிழ்நாடு முதலிடம் வேலூர் ஆப்காவில் 28வது பிரிவு அடிப்படை பயிற்சி நிறைவு விழா: புலனாய்வு பயிற்சி மைய இயக்குனர் பேச்சு

 

வேலூர்: சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாகத்தில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றிருப்பது பாராட்டுக்குரியது என்று வேலூர் ஆப்காவில் நடந்த 28வது பிரிவு அடிப்படை பயிற்சி நிறைவு விழாவில் மத்திய புலனாய்வு பயிற்சி மையத்தின் இயக்குனர் கிராந்தி குமார் கதிதேசி பேசினார். வேலூரில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் (ஆப்கா) 28வது பிரிவு சிறை அதிகாரிகளுக்கு அடிப்படை பயிற்சி ஒன்பது மாதங்கள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின் நிறைவு விழா மற்றும் 29வது பிரிவு துவக்க விழா நேற்று நடைபெற்றது. 29வது பிரிவு அடிப்படை பயிற்சியினை ஐதராபாத்தில் உள்ள மத்திய துப்பறிதல் பயிற்சி மையத்தின் இயக்குனர் கிராந்தி குமார் கதிதேசி, ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். பேராசிரியர் மதன்ராஜா பயிற்சி குறித்து விளக்கி கூறினார்.

தொடர்ந்து 28வது பிரிவு அடிப்படை பயிற்சியை சிறப்பாக முடித்தவர்களுக்கு மத்திய புலனாய்வு பயிற்சி மையத்தின் இயக்குனர் கிராந்தி குமார் கதிதேசி பேசியதாவது: இந்திய நீதித்துறையில் அறிக்கையின்படி 2002ம் ஆண்டில் சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாகத்தில் தமிழ்நாடு சிறைத்துறை முதலிடம் பிடித்திருப்பது பாராட்டிற்குரியது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகா, தெலங்கானா, கேரளா, குஜராத் என அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. முதல் 10 இடங்களில் தென்னிந்தியாவை சேர்ந்த 4 மாநிலங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இதற்கு ஆப்கா வழங்கும் சிறந்த பயிற்சியே காரணம். நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 77 சதவீதம் பேர் விசாரண கைதிகளாகவும், 23 சதவீதம் பேர் தண்டனை தண்டனை பெற்ற கைதிகளாகவும் உள்ளனர்.

சிறைகளில் தண்டனை கைதி விசாரணை கைதி என்று தனித் தனித்தனியாக பிரித்து வைப்பது இயலாத ஒன்று. இதற்காக சிறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது உள்ளது. பலர் மனதளவில் குற்ற செயல்களையும் போதை உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகியும், பலகுற்ற செயல்களை செய்கின்றனர். இவர்கள் சமுதாயத்திற்கு பெரிய அச்சுறுத்தல். இவர்களை எல்லாம் சிறையில் வைத்து சமுதாயத்தை காப்பதுடன், சிறை கைதிகளுக்கான கல்வி தொழிற்பயிற்சி, யோகா போன்ற பயிற்சி அளித்து கைதிகளையும் சீர்திருத்தம் செய்யும் சிறை அதிகாரிகளின் பங்கு பாராட்டுகுரியது. சிறை அதிகாரிகள் நினைத்தால் எத்தகைய குற்றவாளியையும் சீர்திருத்தி நல்வழிப்படுத்த முடியும்.

இதற்காக தாங்கள் 9 மாத காலம் பெற்ற பயிற்சி உங்களுக்கு கை கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார். இதில் 28வது பிரிவில் டெல்லி சிறையைச் சேர்ந்த ஏழு உதவி கண்காணிப்பாளர்கள் கேரளா சிலையைச் சேர்ந்த 10 உதவி கண்காணிப்பாளர்கள், சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த உதவி ஜெயிலர்கள் மூன்று பேர் என மொத்தம் 22 சிறை துறை அதிகாரிகள் அடிப்படை பயிற்சி பெற்றனர். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, சிக்கிம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்தனர். அனைத்திலும் சிறப்பாக பயிற்சியை நிறைவு செய்ததற்கான விருது தமிழ்நாட்டை சேர்ந்த சிறை அதிகாரி ஜெயிலர் திருமலைக்கு வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு பாடப் பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட ஆறு பேருக்கு பதக்கங்களையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. முடிவில் பேராசிரியை பியூலாஇமானுவேல் நன்றி கூறினார்.

The post சிறை சீர்திருத்த நிர்வாகத்தில் தமிழ்நாடு முதலிடம் வேலூர் ஆப்காவில் 28வது பிரிவு அடிப்படை பயிற்சி நிறைவு விழா: புலனாய்வு பயிற்சி மைய இயக்குனர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Jail ,Reforms Administration ,28th Division Basic Training Completion Ceremony ,Vellore ,Afga ,Intelligence Training Center ,Tamil ,Nadu ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...