- டிஜேக்கள்
- பெருநகரின்
- கும்மிப்பூண்டி
- DJS பொது சிபிஎஸ்இ பள்ளி
- பெருநகர்
- கும்மி பூபதி
- பூவாடை
- டிஜேக்கள் பள்ளி
கும்மிடிப்பூண்டி: பெருவாயில் டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயிலில் உள்ள டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியின் ஆண்டு விழா டிஜெஎஸ் கல்வி குழும விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவிற்கு டிஜெஎஸ் கல்விக் குழுமத் தலைவரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டிஜெ கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கல்விக் குழுமச் செயலாளர் டிஜெ ஆறுமுகம், துணைத் தலைவர் டிஜெ தேசமுத்து, பள்ளித் தாளாளர் டிஜெஎஸ்ஜி தமிழரசன், இயக்குனர்கள் பழனி, ஏ.கபிலன், ஏ.விஜயகுமார், டி.தினேஷ், நிர்வாக அலுவலர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி பள்ளி முதல்வர் அசோக் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து பேசிய எம்எல்ஏ டிஜெ கோவிந்தராஜன் கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பேச்சாளர் ராஜ்மோகன் ஆறுமுகம், மாணவர்கள் தன்னம்பிக்கையோடு கற்பது, கூடுதல் திறமைகளை பள்ளி காலத்திலேயே வளர்த்துக்கொள்வது குறித்துப் பேசினார். இதையடுத்து விளையாட்டு, கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு விழாவில் டிஜெஎஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் நடத்திய வீரத்தாய் வேலுநாச்சியார் நாடகம் காண்போரை மெய்சிலிர்க்கச் செய்தது. தொடர்ந்து யோகா, பரதம், ஓவியம் வரைதல், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
The post பெருவாயில் டிஜெஎஸ் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் appeared first on Dinakaran.