×

கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையில் கூடுதல் பணம் வசூலிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பெத்திகுப்பம் ஊராட்சி முனுசாமி நகர் எதிரே 24 மணி நேர அனுமதி இல்லாமல் பார் மற்றும் அரசு மதுபானக்கடை இயங்குகிறது. இந்த கடைக்கு பெத்திகுப்பம், தேர்வழி, ஆத்துப்பாக்கம், நத்தம், மங்காவரம், மேட்டுத் தெரு, அயநெல்லூர், சோழியம்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், மேட்டுக் காலனி, கும்மிடிப்பூண்டி பஜார், தம்புரெட்டிப்பாளையம், தபால் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் மதுபானம் அருந்திவிட்டுச் செல்வது வழக்கம். இங்கு டாஸ்மாக் ஊழியர்கள் மது பாட்டிலுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

இந்தநிலையில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் பெரியவழுதலம்பேடு பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்ற இளைஞர் மதுபானம் வாங்க இந்த டாஸ்மாக் கடைக்கு நேற்று சென்றுள்ளார். அப்பொழுது அவர் வாங்க இருந்த மதுபானத்திற்கு மட்டுமே பணம் வைத்திருந்தார். ஆனால் மதுபான கடை ஊழியர்கள், கூடுதல் பணம் கொடுத்தால் மட்டுமே மதுபாட்டில் வழங்கப்படும் என கூறியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து திருவள்ளூர் கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையில் கூடுதல் பணம் வசூலிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tasmac store ,Gummaipundi ,Gummipundi ,Kummippundi ,Betikuppam ,Navadraksha ,Munusamy Nagar ,Tasmak store ,Gummedipundi ,Dinakaran ,
× RELATED சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப்பிங் மிஷின் திருட்டு..!!