×

பாஜ எம்.பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவரான பாஜ எம்.பி பிரிஜ்பூஷன் மீது நடவடிக்கக் எடுக்கக்கோரி வீராங்கனைகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜ எம்.பியுமான பிரிஜ்பூஷனுக்கு எதிராக இந்திய மல்யுத்த வீரர்கள் பலர் புகார்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வீராங்கனைகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் பாலியல் ரீதியிலாக துன்புறுத்தல் செய்வதாகவும் புகார்கள் சொல்லப்பட்டது. முக்கியமாக பிரபல மல்யுத்த வீராங்கனைகளான தினேஷ் போகத் சாக்ஷி மாலிக் உள்ளிட்டோருடன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் மூன்று மாதங்களுக்கு முன்பாக டெல்லி ஜந்தர் மந்திரி தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர்.

இதையடுத்து ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் விசாரணைக் குழுவை அமைத்ததோடு பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிக்கம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட மேற்பார்வை குழுவை அமைத்தது.எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த மூன்று நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள பாலியல் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்திரவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த மனுவானது அவசர வழக்காக உடனடியாக விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post பாஜ எம்.பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,BJP ,New Delhi ,Indian Wrestling Federation ,Brijbhushan ,
× RELATED பல்வேறு முறைகேடுகளுடன் நடந்து...