×

திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வரும் லேடி வெலிங்டன் கல்லூரியின் வயது 100: விழா நடத்த ஏற்பாடு

சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில், கல்லூரி நாள் விழா மற்றும் பாவேந்தர் பாரதி தாசனின் படத்திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டார். மேலும், இந்த கல்லூரி தொடங்கப்பட்டு 100 அண்டுகள் கடந்த நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர். லேடி வெலிங்டன் காலேஜ் ஆப் எஜூகேசன் என தொடங்கப்பட்டு, பின்னர் லேடி வெலிங்டன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டெடி இன் எஜூகேசன் என மாற்றப்பட்டது. முதன்முதலாக 1923 – 24ம் கல்வியாண்டில் 23 பட்டதாரி ஆசிரியைகள் இக்கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளிவந்தனர்.

தொடர்ந்து இக்கல்லூரி பட்டதாரி ஆசிரியைகளுக்குப் பயிற்சியளிப்பதோடு, மெட்ரிக் பள்ளிக் கல்வியில் தேர்வு பெற்ற மாணவிகளுக்கு இடைநிலைப் பள்ளி ஆசிரியப் பயிற்சியையும், எட்டாம் வகுப்புப் பயின்ற மாணவிகளுக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியப் பயிற்சியையும் அளித்து வந்தது. 1940ல் இளங்கலை பயிற்சி, இளங்கலை கல்வி கொண்டு வரப்பட்டது. முன்பெல்லம் இந்த கல்லூரியில் பி.எட் கவுன்சிலிங் நடைபெறும்போது 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வரும். ஆனால் தற்போது 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான விண்ணப்பங்கள் மட்டுமே வருகின்றன என கல்லூரி பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அறிவியல், புவியுயல் பாடத்தினை யாருமே கண்டு கொள்ளுவதில்லை, ஆங்கிலம் மற்றும் கணித்திற்கு தான் அதிக போட்டிகள் உள்ளன. குறிப்பாக அறிவியல் பாடத்தினை தமிழில் தேர்வு செய்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். ஆனால் தாவிரவியல் மற்றும் விலங்கியலை தேர்ந்தெடுப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வரும் லேடி வெலிங்டன் கல்லூரியின் வயது 100: விழா நடத்த ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Lady Wellington College ,Tiruvallikeni ,Chennai ,Bhavendra Bharati Dasan ,
× RELATED கடலை எண்ணெய்… நாட்டுச்சர்க்கரை…