நாகை: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதியை சேர்ந்தவர் பாரதி (23). நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி கிராமத்தை சேர்ந்தவர் மதன்ராஜ் (24). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். திருமணத்திற்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டு, நாகையில் உள்ள ஒரு கோயிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து பதிவு திருமணம் செய்ய நாகை கோர்ட் வளாகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அங்கு 2 பேரும் கையெழுத்து போடும் நேரத்தில், சினிமாவில் வருவதுபோல சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் பெண்ணின் உறவினர்கள் நுழைந்தனர். பின்னர் பெண்ணை அடித்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தனர். வெளியே நின்ற காரில் பெண்ணை ஏற்றும் போது அவர் காப்பாற்றும்படி அலறினார். இதை கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து தடுத்தனர். அங்கு வேறு ஒரு பணிக்காக வந்த பெண் காவலரும் தடுக்க முயற்சி செய்தார். அப்போது பெண்ணின் தந்தை, விஏஓவான தன்னை தடுக்க கூடாது என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசாரிடம், பொதுமக்கள் காரில் இருந்த பெண்ணை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் கோர்ட் வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்குள் அழைத்து சென்றனர். இதனிடையே வெளிப்பாளையம் போலீசில் தனக்கு பாதுகாப்பு வழங்கவும், பாரதியை மீட்டுத்தரவும் கோரி மதன்ராஜ் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….
The post பதிவு திருமணம் செய்ய வந்த பெண்ணை அடித்து காரில் ஏற்றிய உறவினர்கள்: பொதுமக்கள் மீட்டு போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.