×

அறிவியல், காலநிலை, சுற்றுச்சுழல் அமைப்பின் தென்பிராந்திய ஒருங்கிணைப்பாளராக சென்னை விஞ்ஞானி சிவகுமார் நியமனம்

திருவள்ளூர்: புதுடெல்லியில் உள்ள அறிவியல், காலநிலை மாற்றம் மற்றும் நிலையான சுற்றுசூழல் அமைப்பின் தென்பிராந்திய ஒருங்கிணைப்பாளராக சென்னையை சேர்ந்த பிரபல விஞ்ஞானியும் சமூக ஆர்வலருமான டாக்டர் இ.கே.தி.சிவகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். நாடு முழுவதும் நிலையான வளர்ச்சிக்காக காலநிலை அறிவியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் தகவல்களை பரப்புதல் ஆகியவை இந்த அமைப்பின் செயல்பாடாகும்.

கடந்த 2001ம் ஆண்டு டாக்டர் இ.கே.தி.சிவக்குமார் சென்னை மாநில கல்லூரியில் வேதியியல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, சுமார் 9 ஆண்டுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நானோ அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் வருகை பேராசிரியராக பணியாற்றினார். பிறகு, அவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செராமிக் தொழில்நுட்பத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார்.மேலும், இவர் பல்வேறு ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து, உலகளவில் பல அறிவியல் மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார்.

அவரது அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி சமூக சேவைகளுக்காக 500க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறார். மேலும் விஞ்ஞானிகளின் பாராட்டுதலுக்குரியவரும், அறிவியல் தமிழ் பணியில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவருமான டாக்டர் இ.கே.தி.சிவக்குமார், வளரும் அறிவியல் இதழின் ஆசிரியர் எனக் குறிப்பிடத்தக்கது.

The post அறிவியல், காலநிலை, சுற்றுச்சுழல் அமைப்பின் தென்பிராந்திய ஒருங்கிணைப்பாளராக சென்னை விஞ்ஞானி சிவகுமார் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Sivakamar ,Coordinator ,Science, Climate and Environment ,Thiruvallur ,Chenna ,Science, Climate Change and ,Sustainable ,Environment ,New Delhi ,Chennai ,Sivagamar ,
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...