×

ஆப்ரேஷன் காவிரி என பெயர்சூட்டி சூடானில் உள்ள 3000 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சர் தகவல்

டெல்லி: சூடானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரின் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சூடானில் சுமார் 3000 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க்கும் இந்த திட்டத்திற்கு ஆப்ரேஷன் காவிரி என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக சூடானில் உள்ள துறைமுகத்திற்கு சுமார் 500 இந்தியர்கள் சூடானின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளனர். இன்னும் ஒருசில இடங்களில் இருந்து பல்வேறு இந்தியர்கள் அந்த துறைமுகத்துக்கு வரவுள்ளார். சூடானில் உள்ள இந்தியர்கள் விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் மீட்கப்படவுள்ளார்.

ஏற்கனவே, இந்த திட்டத்திற்கு இந்திய அரசு ஐ.என்.எஸ். ஒமேகா என்ற கப்பலையும், T-130 என்ற 2 போர் விமானத்தையும் அங்கு தயாராக வைத்துள்ளது. இதன் மூலம் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் மீட்கப்படவுள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தை செயல்படுத்தியது. தற்போது சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் காவிரி என பெயரிடப்பட்டுள்ளது.

The post ஆப்ரேஷன் காவிரி என பெயர்சூட்டி சூடானில் உள்ள 3000 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Indians ,Afration Kaviri ,Delhi ,Sudan ,Kaviri ,Dinakaran ,
× RELATED சாம் பிட்ரோடாவின் கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை : ஜெய்ராம் ரமேஷ்