×

காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் இத்தனை நாட்களாக எங்கு மறைந்திருந்தார்?.. காங். மூத்த தலைவர் கேள்வி

புதுடெல்லி: தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங், இத்தனை நாட்களாக எங்கே மறைந்திருந்தார், அவருக்கு அடைக்கலம் கொடுத்தது யார்? என்று காங்கிரஸின் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். காலிஸ்தான் ஆதரவு தலைவன் அம்ரித்பால் சிங் என்பவரை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பஞ்சாப் போலீசார் தேடி வந்தனர். நேற்று அம்ரித்பால் சிங், பஞ்சாப் மோகா காவல்துறையிடம் தானாக முன்வந்து சரண் அடைந்தார். தற்போது அம்ரித்பால் சிங் கைது தொடர்பாக காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்:
இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரகர் மற்றும் பயங்கரவாதிகளின் ஆதரவாளரான அம்ரித்பால் சிங்கை முதல்முறையாக தப்பிக்க உதவியவர் யார்? இத்தனை நாட்களாக அம்ரித்பால் எங்கே மறைந்திருந்தார், அவருக்கு அடைக்கலம் கொடுத்தது யார்? அவர் எங்கே தங்கினார், அந்த சக்திகள் இந்திய எதிர்ப்பு சக்திகள் அல்லவா? அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள் யார்?, என்.ஐ.ஏ., சி.பி.ஐ. ஐ.பி. மற்றும் பஞ்சாப் போலீஸ் ஏன் அதை வெளியிடவில்லை?. இந்தியாவின் உள்ளேயும் வெளியேயும் செயல்படும் அமிர்தபால் சிங்கின் கூட்டு சதிகாரர்கள் யார்?, அவர்களுக்கு எதிராக மத்திய மற்றும் பஞ்சாப் அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றிய மற்றும் மாநில அரசில் உள்ள ஒருவருடன் அம்ரித்பால் சிங்குக்கு தொடர்பு உள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

The post காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் இத்தனை நாட்களாக எங்கு மறைந்திருந்தார்?.. காங். மூத்த தலைவர் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Amritpal Singh ,New Delhi ,Congress ,
× RELATED சிறையில் இருந்தபடியே வென்ற 2...