×

நியூசிலாந்து தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

கெர்மடெக்: நியூசிலாந்து நாட்டின் கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானதாகவும், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. பயங்கரமான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கெர்மடெக் தீவு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையை அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு விடுத்துள்ளது. நியூசிலாந்தின் வடமேற்கில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.41 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாவும், இதுவரை உயிர் சேதம் அல்லது பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம், கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேகாலயாவில் அடுத்தடுத்து…
மேகாலயாவின் மேற்கு காசி மலைப்பகுதியில் இன்று காலை 7.47 மணியளவில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று மாலை 3.33 மணியளவில் மேகாலயாவின் தெற்கு கரோ மலைப்பகுதியில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. மேற்கண்ட அடுத்த நிலநடுக்கங்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post நியூசிலாந்து தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : New Zealand island ,Kermadec ,Kermadec Islands ,New Zealand ,Tsunami Warning ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில்...