![]()
கொல்கத்தா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் எம்பி ராகுல் காந்தி ஆகியோரை டெல்லியில் நிதிஷ் குமார் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சந்தித்து பேசினர்.
2024 தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக மம்தா, நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவை சந்திப்பது தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மற்றும் கூட்டணிக்கான அடித்தளத்தை அமைப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்த சந்திப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே இன்று மாலை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசுகிறார். கடந்த மாதம் கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜியை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி?.. மம்தா பானர்ஜியுடன் நிதிஷ்குமார் சந்திப்பால் தேசிய அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.
