×

பனப்பாக்கத்தில் 1,000 ஆண்டு பழமையான மயூரநாதர் கோயிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்-36 ஆண்டுக்கு பிறகு நடைபெறுகிறது

நெமிலி : நெமிலி அடுத்த பனப்பாக்கத்தில் 1,000 ஆண்டு பழமையான மயூரநாதர் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.நெமிலி அடுத்த பனப்பாக்கத்தில் மாயூரநாதர் கோயில் உள்ளது. உமாதேவி, நந்திதேவர், இந்திரன், பிரம்மன், திருமால், தக்கன், மன்மதன், இயமன், வீரபத்திரர், அகத்தியர், வேதியர் போன்றோர் மாயூரநாதரை இக்கோயிலில் தரிசித்துள்ளனர்.

சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் சவுந்தர்ய நாயகி, தலமரம் பனைமரம், ஆதலால் இவ்வூருக்கு பனப்பாக்கம் என்றும் உமையம்மை மயில் வடிவில் வழிபாடு செய்ததால் இறைவனுக்கு மயூரநாதர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இக்கோயிலுக்கு திருத்தாலபுரி, மயூரபுரி, புலியூர், இந்திரபுரி, பிரமபுரி, கலியாணமாவூர் முதலிய பெயர்கள் என பனசைப் புராணத்தில் குறிக்கப்படுகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் 36 ஆண்டுக்குப் பிறகு பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்குகிறது. இதனையொட்டி நேற்று காலை எல்லையம்மன் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது.

அதனை தொடர்ந்து இன்று அதிகாலை மயூரநாதர் உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு காட்சி அளிக்கின்றனர். வேத பண்டிதர்கள் மந்திரங்கள் ஓத பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று அதிகாலை தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து, உற்சவமூர்த்திகள் 10 நாட்கள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது.

The post பனப்பாக்கத்தில் 1,000 ஆண்டு பழமையான மயூரநாதர் கோயிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்-36 ஆண்டுக்கு பிறகு நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Brahmotsavam ,Mayuranathar ,Panappakkam ,Nemili ,Temple ,Panapakkam ,Nemili… ,Mayuranathar Temple ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...