×

திருமண விழாக்களில் மதுபானம் பரிமாற அனுமதி இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!

கோவை: திருமண மண்டபங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி இல்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறவும், மதுபானம் பயன்படுத்தவும் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு இன்று காலை அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி; திருமண மண்டபங்களில் மதுபானங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை; சர்வதேச நிகழ்ச்சிகளில் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

‘தமிழ்நாட்டில் சர்வதேச நிகழ்ச்சிகள், சர்வதேச போட்டிகள் நடைபெற வேண்டும் என்றால் மது அருந்த அனுமதியளிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மதுபானம் அனுமதி நடைமுறையில் உள்ளது; பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாடுகள், ஐபிஎல் போட்டி போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே அனுமதி எனவும் விளக்கம் அளித்தார்.

The post திருமண விழாக்களில் மதுபானம் பரிமாற அனுமதி இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Govai ,Senthilpalaji ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம்...