×

மராட்டியத்தில் சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேச்சு

மும்பை: மராட்டியத்தில் சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரும் என்று முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிவசேனா பிளவுபட்ட பின்னர் பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார் 40-க்கும் மேற்பட்ட எம்.ஏக்களுடன் பாஜக-வில் இணைய போவதாக தகவல் வெளியானது. இது உண்மையை அல்ல என அஜித் பவார் மறுத்தாலும் மராட்டிய அரசியலில் தொடர்ந்து பதற்றமே நீடித்து வருகிறது.

இதனிடையே ஜல்காவ் மாவட்டம் பச்சோராவில் பொது கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே மராட்டியத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரக்கூடும் என்றார். மராட்டிய மக்கள் அளித்துவரும் ஆதரவை பார்த்தால் சிவசேனா யாருக்கு சொந்தம் என்பதை அண்டை நாடான பாகிஸ்தான் கூட சொல்லிவிடும். ஆனால் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லை என்றும் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். இதனுடைய ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு இன்னும் 3 வாரத்திற்குள் கவிழ்ந்து விடும் என்று தாக்கரே ஆதரவு எம்.பி. சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

The post மராட்டியத்தில் சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேச்சு appeared first on Dinakaran.

Tags : Maratham ,Former Chief Minister ,Uttav Takare ,Mumbai ,Shivasena ,Marathum Assembly ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால்...