×

முருங்கை 20 டன் வரத்து கிலோ ரூ.6க்கு விற்பனை

 

வெள்ளக்கோவில், ஏப். 24: வெள்ளகோவிலில் முருங்கை மார்க்கெட்டுக்கு 20 டன் வரத்து வந்த நிலையில் கிலோ ரூ.6 விற்பனையானது.வெள்ளகோவில், முத்தூர், காங்கயம், புதுப்பை பகுதிகளில் செடிமுருங்கை, மரமுருங்கை ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. வெள்ளகோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கைக் காயை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனை வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். மேலும் அருகில் உள்ள ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கும் விவசாயிகள் முருங்கையை விற்பனைக்கு கொண்டு செல்வர். கடந்த வாரம் 45 டன் வரத்தான நிலையில் கிலோ ரூ.6க்கு விற்பனையானது. நேற்று 20 டன் வரத்தானது, மர முருங்கை ரூ.6க்கும், செடி முருங்கை ரூ.8க்கும், கரும்பு முருங்கை ரூ.10க்கும் விலைபோனது.

The post முருங்கை 20 டன் வரத்து கிலோ ரூ.6க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Vellakovil ,Vellakoil ,Dinakaran ,
× RELATED மாணவி கூட்டு பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு குண்டாஸ்