×

கிட்டாம்பாளையம் பழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேக விழா

 

சோமனூர், ஏப்.24: கிட்டாம்பாளையம் பழனியாண்டவர் கோயில் மஹா கும்பாபிஷேக பெருவிழா நேற்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. கோயிலில் கடந்த 21ம் தேதி வெள்ளிக்கிழமை மேளதாள வாத்தியத்துடன் தீர்த்த அபிஷேக நிகழ்ச்சியுடன் மகா கும்பாபிஷேக விழா துவங்கியது. இதையடுத்து தினசரி மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று மகா கும்பாபிஷேக விழா காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கிட்டாம்பாளையம் பழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Kitampalayam Palani Lord Temple Kumbabhishek ceremony ,Somanur ,Kittambalayam Palaniandavar Temple ,Maha Kumbabhishek ceremony ,Kittampalayam Palani Lord Temple Kumbabhishek ceremony ,