×

போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ ஸ்வியாடெக் மீண்டும் சாம்பியன்

ஸ்டுட்கார்ட்: ஜெர்மனியில் நடைபெற்ற போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாட, நம்பர் 1 வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான இகா ஸ்வியாடெக் கோப்பையை தக்கவைத்தார். பைனலில் பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்காவுடன் (24 வயது, 2வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (21 வயது, போலந்து) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் சபலென்கா கடும் நெருக்கடி கொடுத்தாலும், அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தையும் கோப்பையையும் தக்கவைத்துக் கொண்டார்.
விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 50 நிமிடத்துக்கு நீடித்தது. கடந்த ஆண்டு பைனலிலும் சபலென்காவை வீழ்த்தியே அவர் கோப்பையை முத்தமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு சீசனில், ஒற்றையர் பிரிவில் ஸ்வியாடெக் வென்ற 2வது பட்டம் இது. சபலென்காவுடன் 7 முறை மோதியுள்ள அவர் 5-2 என முன்னிலை வகிக்கிறார்.

The post போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ ஸ்வியாடெக் மீண்டும் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Porsche Tennis Grand Free Sweatech ,Stuttgart ,Porsche Tennis Grand Free ,Germany ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…