×

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் அமமுக பொருளாளர்

சென்னை: அமமுக பொருளாளரும், திருச்சி மாநகர செயலாளருமான திருச்சி ஆர்.மனோகரன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தார்.ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக மூன்றாக பிரிந்தது. அதில் டிடிவி தினகரன் கட்சியில் திருச்சி ஆர்.மனோகரன் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு பல்வேறு பதவிகளை டிடிவி தினகரன் வழங்கினார். மேலும் அமமுக சார்பில் திருச்சியில் கடந்த 2021ம் ஆண்டு போட்டியிட்டார். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், அமமுக பொருளாளரும் திருச்சி மாநகர செயலாளருமான ஆர்.மனோகரன், அமமுக கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் நேற்று இணைந்தார்.  அவருடன் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தினேஷ்குமார், மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல் ரகுமான், அந்தநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் சாத்தனூர் பி.வாசு உள்ளிட்ட நிர்வாகிகள் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

The post எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் அமமுக பொருளாளர் appeared first on Dinakaran.

Tags : Edabadi Palanisamy ,Adhimukka ,Amatmati ,Chennai ,Trichy R.R. ,Director General ,Edapadi Palanisamy ,Manokaran Akshi ,Amukha ,Amatmati Treasurer ,
× RELATED தாம்பரத்தில் அதிமுக சார்பில் வரும் 5ம்...