×

சீதை கோயில் சிறப்பு தபால் தலை இலங்கை பிரதமர் வெளியிட்டார்

கொழும்பு: இலங்கை நுவரெலியாவில் புராதனமான சீதை கோயில் உள்ளது. இந்த கோயிலின் நினைவு சிறப்பு தபால் தலையை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே நேற்று வெளியிட்டார். அதே போல் ராவணன் சீதையை சிறைபிடித்த இடத்தில் உள்ள அசோகவனத்தில் தியான மையத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தியான மையம் அமைப்பதன் மூலம் அந்த பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என இலங்கை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

The post சீதை கோயில் சிறப்பு தபால் தலை இலங்கை பிரதமர் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Sri ,Lanka ,Sith Temple ,Colombo ,Sri Lanka ,Nuwara Eliya ,Dinesh ,Siti Temple ,
× RELATED தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு...