புவனேஸ்வர்: புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தினால் பழைய வேலைகள் காணாமல் போய்விடும். படிப்பை விட தகுதி, திறமை தான் எதிர்காலத்தை வழிநடத்தும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்த வாரம் நடக்க இருக்கும் ஜி20 கல்வி குழு கூட்டம் தொடர்பான ‘வேலையின் எதிர்காலத்தில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட ஆழமான தொழில்நுட்பம்’ கருத்தரங்கு கூட்டத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “பட்டப்படிப்புகளை விட திறமை தான் எதிர்காலத்தை வழிநடத்தும். கடவுள் கொடுத்த அறிவுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையே எப்போதும் போட்டி இருந்து கொண்டே இருக்கும். கட்டுக்கு அடங்காத புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தினால் பழைய வேலைகள் காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது. புதிய வேலைகள் உருவாகின்றன. ஆனால் தொழிலாளர்களிடம் திறமை, மீள்திறமை, திறன் மேம்பாடு தொடர்ந்து இருப்பது அவசியம். எனவே, எதிர்கால வேலைகளுக்கு இளைஞர்களை புதிய அணுகுமுறையுடன் தயார் செய்ய வேண்டும். இந்தியா, 21 ஆம் நூற்றாண்டின் உலக நாடுகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் முன்னணி நாடாக பங்கு வகிக்கப் போகிறது. இந்த வாய்ப்பை இந்தியாவின் இளைஞர்கள் பயன்படுத்திக் ெகாள்ள வேண்டும்,” என்றார்.
The post புதிய தொழில்நுட்பத்தால் பழைய வேலைகளுக்கு ஆபத்து: கல்வி அமைச்சர் பிரதான் பேச்சு appeared first on Dinakaran.