×

ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டல் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய போலி கேரள போலீஸ் கும்பல் கைது: மேலும் 6 பேருக்கு வலை

கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சஞ்சீவி (42). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்கியிருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர். கடந்த 8ம் தேதி சஞ்சீவி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்று, அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். 10ம் தேதி சஞ்சீவி அறையில் இருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல் தங்களை போலீஸ் அதிகாரிகள் என்றும், நீங்கள் இரிடியம் மோசடியில் ஈடுபடுவதாக தகவல் வந்துள்ளது என கூறி சஞ்சீவியை காரில் கோவைக்கு கடத்தி வந்தனர். வழியில் அவரது டிரைவரை கரூரில் இறக்கிவிட்டனர். பின்னர் காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.

அப்போது கேரளாவை சேர்ந்த முக்கிய குற்றவாளியான சிபின் என்பவர் தான் கேரள போலீஸ் எனக் கூறி அங்கு வந்தார். அவருடன் கிப்சன், சமீர் முகமது ஆகியோரும் வந்திருந்தனர். இவர்கள் 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் அணிந்திருந்த 30 பவுன் நகைகளை மிரட்டி பறித்தனர். பின்னர் அந்த கும்பல் சஞ்சீவியை சேலம் பைபாஸ் ரோட்டில் டோல்கேட் அருகே இறக்கிவிட்டு ரூ.30 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு சென்றனர்.

இது குறித்து சஞ்சீவி புகாரின்படி காட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து கேரளாவை சேர்ந்த சிபின், கிப்சன், சமீர் முகமது மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த குமார் என்ற மீன் சுருட்டி குமார் (42) ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 124 கிராம் தங்க நகைகளை மீட்டனர். மற்ற 6 பேரையும் தேடி வருகின்றனர்.

The post ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டல் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய போலி கேரள போலீஸ் கும்பல் கைது: மேலும் 6 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Sanjeevi ,Uthangarai ,Krishnagiri district ,Bengaluru, Karnataka ,Dinakaran ,
× RELATED ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.30 கோடி மோசடி: தம்பதி கைது